சான்று (பெயர்ச்சொல்)
ஒன்றின் அல்லது ஒருவரின் தன்மையை சுட்டிக்காட்டுதல்.
அசூயை (பெயர்ச்சொல்)
ஒருவருக்குக் கிடைத்திருப்பது தனக்குக் கிடைக்கவில்லை என்பதைப் பொறுக்காமல் ஒருவர் அடையும் எரிச்சல் கலந்த மனக் குறை.
ஆட்டம் (பெயர்ச்சொல்)
பொழுதுபோக்கிற்காகவும் திறமையை வெளிப்படுத்தும் விதமாகவும் நிகழ்த்தப்படும் விதிமுறைகளை உடைய செயல்பாடு.
குறிக்கோள் (பெயர்ச்சொல்)
குறிக்கோள், இலக்கு
பொறாமை (பெயர்ச்சொல்)
ஒருவருக்குக் கிடைத்திருப்பது தனக்குக் கிடைக்கவில்லை என்பதைப் பொறுக்காமல் ஒருவர் அடையும் எரிச்சல் கலந்த மனக் குறை.
சிரிப்பு (பெயர்ச்சொல்)
மகிழ்ச்சி, கேலி முதலியவற்றை வெளிப்படுத்தும் விதத்தில் சிரித்தல்.
செக் (பெயர்ச்சொல்)
மத்திய ஐரோப்பாவின் ஒரு நாடு
அழுக்கு (பெயர்ச்சொல்)
உடை, உடல் முதலியவற்றில் சேரும் அசுத்தம்
உளறல் (பெயர்ச்சொல்)
பைத்தியத்தைப் போல பேசுகின்ற அர்தமில்லாதப் பேச்சு
கவனம் (பெயர்ச்சொல்)
செய்யும் செயலுடன் மனம் ஒன்றிய நிலை.